புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்!

1029பார்த்தது
புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்!
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசார் 18 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அப்போது அவர் போதையில் இருந்ததால் அவரது வீட்டை சுற்றி தடயங்களை தேடியுள்ளனர். இந்நிலையில் காப்பாற்றுங்கள் என ஒரு குரல் பூமிக்கடியில் இருந்து வந்துள்ளது. தோண்டி பார்த்ததில் 62 வயது முதியவர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு இளைஞருடன் மது அருந்தியபோது நடந்த தகராறில் முதியவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி