மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 18) அறிவித்துள்ளார். மேலும், தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.