டெல்லியில் நாளை (மே 19) மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்ளுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் இன்று (மே 18) வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், இந்த போராட்டத்தை அறிவித்துள்ளார். மேலும், ‘ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்பதை பிரதமருக்கு சொல்லிக் கொள்கிறேன்” என காட்டமாக பேசியுள்ளார்.