மனைவியை கொல்ல சென்று மாமனாரை கொலை செய்த மருமகன்

67பார்த்தது
மனைவியை கொல்ல சென்று மாமனாரை கொலை செய்த மருமகன்
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ மனோகரன் (71). இவரது மகள் மனோ ரம்யா ராஜ்குமார் (43) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜ்குமார் மனோ ரம்யாவை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 14ஆம் தேதி அவரது வீட்டு குளியறையில் காத்திருந்துள்ளார். ஆனால் அவருக்கு பதில் அவரது தந்தை ராஜ மனோகரன் வந்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த ராஜ்குமார் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி