கஞ்சா வழக்கு - முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது

50பார்த்தது
கஞ்சா வழக்கு - முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் உதவியாளர் தீபன், சற்குணம், சபரி கண்ணன் ஆகியோரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி