ரூ.100 கோடி வசூலை தாண்டிய பஹத் பாசிலின் 'ஆவேசம்'

77பார்த்தது
ரூ.100 கோடி வசூலை தாண்டிய  பஹத் பாசிலின் 'ஆவேசம்'
ஜித்து மாதவன் இயக்கித்தில் பஹத் பாசில்,நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இதில் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 13 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது. மலையாள படங்களான 'பிரேமலு', 'மஞ்சுமல பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்' படங்களைத் தொடர்ந்து 'ஆவேஷம்' ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி