நிற்பதற்கு கூட நேரமில்லாத இந்த 21-ம் நூற்றாண்டில் அனைத்தும் எந்திரமயமாகி உள்ளது. துணி துவைக்க, பாத்திரம் விளக்க, வீட்டை சுத்தம் செய்ய, மாவு அரைக்க என அனைத்து அன்றாட வேலைகளிலும் எந்திரங்களின் தேவை உள்ளது. இந்த வரிசையில் தற்போது தோசை சுடுவதற்கும் எந்திரம் அறிமுகமாகி உள்ளது. நீங்கள் தோசை கல்லில் மாவு ஊற்றினால் மட்டும் போதும் எந்திரம் முறுகலான தோசையை சுட்டு தந்துவிடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த எந்திரம் சாதாரண சாலையோர உணவகத்திலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதுதான்.