பிரபல நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு இருவருக்கும் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று (செப்டம் 15ம் தேதி) காலை 11 மணிக்கு நடந்து முடிந்தது. சாய் விஷ்ணு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் – கற்பகம் தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.