பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூர்: தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உதவி மாவட்ட அலுவலர் தே. வீரபாகு தலைமையில் பெரம்பலூர் நகரின் முக்கிய பகுதிகள். பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பெரம்பலூர் நகரை சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தான போலி ஒத்திகை பயிற்சிகளும், விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் செய்தும், பாடல்கள் பாடியும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வீ. பழனிச்சாமி நிலைய அலுவலர் போக்குவரத்து, அ. செந்தில்குமார் சிறப்பு நபோக்குவரத்து வீ. துரைசாமி சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து , முன்னணி தீயணைப்பாளர் மு. இன்பராசன் மற்றும் நிலையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்