கேரளாவின் கண்ணூரில் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த நவீன் பாபு (56) ஒரு ஊழல்வாதி என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் பிரமுகர் திவ்யா பேசிய நிலையில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நவீனை தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரின் முன்ஜாமீன் மனு நேற்று (அக். 29) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் திவ்யாவை கைது செய்து மகளிர் சிறையில் அடைத்தனர்.