நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் டீலர் கமிஷனை உயர்த்தியுள்ளதால் லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரிவாயு விலை குறைய வாய்ப்பு உள்ளதாக பெட்ரோலிய அமைச்சரும் பேசியுள்ளார்.