பெரம்பலூர்: வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் (29. 10. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. வைத்தியநாதன், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வருவாய் வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.