கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29. 10. 2024 செவ்வாய்க்கிழமை மாசில்லா தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சேர்மன் முனைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலர் முனைவர் மித்ரா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் செயலர் முனைவர் மித்ரா பேசுகையில் மாசில்லா தீபாவளியை கொண்டாடுமாறு எடுத்துரைத்தார் தீபாவளி பட்டாசுகளை பார்த்து பாதுகாப்பாக கொண்டாடுமாறு அறிவுத்தினார் மற்றும் இந்த தீபாவளி திருநாளில் ஆதரவற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் எடுத்துரைத்தார். இதை கேட்ட மாணவர்கள் பலரும் மாசில்லா தீபாவளியை கொண்டாடுவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மற்றும் மாணவர்களுக்கு தீபாவளி எப்படி உருவானது என்று எதனால் நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம் என்று பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மாணவர்களுக்கு புரியும் விதத்தில் அழகாக எடுத்துரைத்தார். மாணவர்கள் மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என உறுதிமொழியை எடுத்தனர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் பட்டாசுகள், கம்பி மத்தாப்புகள் போன்றவற்றை அவர்களே கலர் பேப்பர்களை கொண்டு செய்தனர் மற்றும் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது என்பதை ஆசிரியர்கள் செய்முறைப்படுத்தி காட்டினர். அதை வைத்து பள்ளியில் மாசில்லா தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.