பெரம்பலூர்: கூட்டுறவு வார விழா, கொடியினை ஏற்றி வைத்த கலெக்டர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 71-வது கூட்டுறவு வார விழாவினை துவக்கி வைக்கும் விதமாக பெரம்பலூர் சங்கு பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் (14.11.2024) கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2024 தொடங்கி 20.11.2024 வரை ஒரு வாரத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் நடத்தப்பட உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 14.11.2024 முதல் தொடங்கி 20.11.2024 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், அட்மா தலைவர் ஜெகதீசன், துணைபதிவாளர்கள் சிவக்குமார் (பொ.வி.தி) இளஞ்செல்வி, ஜெயபாலன் (பால்வளம்) முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேஷ், பெரம்பலூர் துணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் சங்க செயலாளர்கள் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.