பெரம்பலூரில் அமைச்சர் எ. வ. வேலு பேட்டி

74பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று 15ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11, 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். அதில் தங்கள் துறைக்கு உட்பட்ட திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார் செய்தியாளர்களிடம் அமைச்சர் தேவை கையில் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த காரணத்தினால் அவர் அரசியல் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆகையினால் தனது அரசியலை விரிவுபடுத்திக் கொள்வதற்காக, மக்களிடம் கவனத்தை ஈர்ப்பதற்காக எங்கள் ஆட்சியில் தான் செய்தோம் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரே மேடையில் நானே வருகிறேன் நாங்கள் எங்கள் ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்களை அரசு ஊழியர்களுக்கு செய்திருக்கிறோம் என்று பட்டியல் போடுகிறோம், அவர் என்ன செய்திருக்கிறார் என்று அவரும் ஒரு பட்டியல் போடட்டும் அதில் உள்ள நிறை குறைகள் பொதுமக்களுக்கும் தெரியவரும் அரசு ஊழியர்களுக்கும் தெரியவரும் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி