அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுவின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார். இவருடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.