அரியலூர் மாவட்டம். தாபழூர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரி வர விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்ளுடன் அரியலூர் சாத்தனூர் கும்பகோணச்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.