பெரம்பலூர்: தலைமுறைவாக இருந்த போக்சோ குற்றவாளி கைது

1086பார்த்தது
பெரம்பலூர்: தலைமுறைவாக இருந்த போக்சோ குற்றவாளி கைது
நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த போக்சோ வழக்கின் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கைகளத்தூர்,
பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் வேல்முருகன் (32), என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நபரை நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்ட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமை காவலர் சுரேஷ், முதல்நிலை காவலர் கலைமணி ஆகியோரைக் கொண்ட தனிப்படை குழுவினர் குற்றவாளி வேல்முருகனை கண்டுபிடித்து ஜூன் 10ஆம் தேதி இன்று மாலை 4 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் பிடியாணை ரீ-கால் செய்யப்பட்டது.