அரியலூர்: விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம்

4894பார்த்தது
அரியலூர்: விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிழமைபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்கள் ஸ்டாலின், ஏசுபாலன், நண்பர்கள் ஆன இவர்கள் இருவரும் கல்லாத்தூர் கூலி வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டாலின், இயேசு பாலன் ஆகியோரை அப்பகுதி மக்கள் மிட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி