ஆண்மையை அதிகரிக்கும் என அறியப்பட்ட வயகரா மாத்திரைகள் நினைவாற்றலை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் VASCULAR DEMENTIA எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் மூளைக்கு ரத்தம் முறையாக செல்லாமல் ரத்த செல்கள் பாதிக்கப்படுவதால் மறதி நோய் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில்டெபினால் எனப்படும் வயகரா மாத்திரை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே வயகரா மாத்திரை மறதி நோய்க்கு மருந்தாக அமையலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.