'நீங்கள் நலமா' என்ற திட்டம் இன்று தொடக்கம்

63பார்த்தது
'நீங்கள் நலமா' என்ற திட்டம் இன்று தொடக்கம்
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசின் திட்ட பயன்கள் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக 'நீங்கள் நலமா' திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்தப் புதிய திட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என பொதுமக்களை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி