மாறிவிட்ட கால சூழ்நிலையில் யாருக்கு எந்த நோய் வருகிறது என்றே சொல்ல முடியவில்லை. பலரும் நமக்கு இந்த நோய் வர வாய்ப்பில்லை என்று அலட்சியம் காட்டுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி எடுத்தல், கால், கை மரத்து போதல், பாதங்களில் எரிச்சல், மங்கலான பார்வை, கழுத்தைச் சுற்றி கருமை நிறம் தோன்றுதல், திடீர் எடை இழப்பு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.