ரேஷன் கடைகள் எப்பொழுதும் பூட்டியுள்ளதா?

8975பார்த்தது
ரேஷன் கடைகள் எப்பொழுதும் பூட்டியுள்ளதா?
நியாய விலைக் கடைகள் குறிப்பிட்ட நாள்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். இதை மீறி பூட்டப்பட்டு இருக்கும் நியாய விலைக் கடைகள் குறித்து எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது. "9773904050" என்ற எண்ணுக்கு தங்களது மொபைல் எண்ணில் இருந்து "PDS 102 மூடப்பட்டுள்ளது" என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதையடுத்து, உங்கள் புகாரின் பேரில் விசாரித்து அக்கடையின் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி