நெருங்கும் ஐபிஎல்- சிஎஸ்கே அணி சென்னை வருகை

75பார்த்தது
நெருங்கும் ஐபிஎல்- சிஎஸ்கே அணி சென்னை வருகை
இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அணியின் கேப்டன் தோனி எப்போது வரவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி