புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்?

55பார்த்தது
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்?
புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15 மத்திய அரசு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மார்ச் 15ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் தேர்தல் தேதி தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.