வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வரை அடுத்த ஒரு வாரத்திற்கு மேல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், காற்றில் ஈரப்பதத்தின் அதிகரிப்பால் வெப்பத்தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.