அதிமுக பெயரில் மேலும் ஒரு அணி தொடக்கம்!

17738பார்த்தது
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி, புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து "அதிமுக ஒருங்கிணைப்புக் குழு"- வை தொடங்கியுள்ளார். அதிமுகவை யாரோ அழிக்கப்பார்கிறார்கள் என புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக VS பாஜக என இருந்ததை திமுக VS பாஜக என கொண்டு வந்துவிட்டார்கள். இதனை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை என புகழேந்தி கூறியுள்ளார். நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி