மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கிய ஆந்திர முதல்வர்

76பார்த்தது
மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கிய ஆந்திர முதல்வர்
ஆந்திராவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பேருந்து யாத்திரை நடத்தினார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசி தாக்கியதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது.மேலும் முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வில் இருந்த அவர் இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி