பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் வெற்றி பெற்று வாங்கிய பதக்கங்கள் சாயம் வெளுப்பதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்க ஸ்கேட்போர்ட் வீரரான நைஜா ஹஸ்டன், ஜூலை 29 அன்று வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், "எனது வெண்கலப் பதக்கம் அதன் நிறத்தை ஒரே வாரத்தில் இழக்கத் தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் பதக்கத்தின் தரத்தை நீங்கள் அதிகரிக்க வேண்டும்" என ஹஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.