கத்தரி வெயிலால் உயிரிழந்த முதியவர்

10988பார்த்தது
கத்தரி வெயிலால் உயிரிழந்த முதியவர்
திருத்தணி பகுதியில் கடந்த 10 நாட்களாக 108 டிகிரி வெயில் கொளுத்தி வருவதால் அனல் காற்று வீசுகிறது. இதனால், சிறுவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் திருத்தணி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர் சொக்கலிங்கம் (66) நேற்று வெயிலின் தாக்கம் தாளாமல் மயங்கி விழுந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி