அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்ட நிலையில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இது போன்ற தாங்க முடியாத வெப்பநிலை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் மூலம் வெயில் கால நோய்கள் பல ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை உச்சமாக இருக்கும் வெப்பத்தால் தோல், கண்கள், இரைப்பை அமைப்பு உட்பட முழு உடல் உறுப்புகளிலும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். வெயில் கால நோய்கள் தாக்காமல் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.