பிரஜ்வல் குறித்து மனம் திறந்த மோடி

77பார்த்தது
பிரஜ்வல் குறித்து மனம் திறந்த மோடி
ஆபாச வீடியோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் முதன் முறையாக பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். வீடியோக்கள் இது ஜே.டி.எஸ்-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் என்பதை உணர்த்துகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த வீடியோக்களை தேர்தல் சமயத்தில் வெளியிட்டு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

அதுவும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிறகு இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க காங்கிரசின் அரசியல் விளையாட்டு. பிரஜ்வலை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you