பரந்தூர் விமான நிலையம்- சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலினை

62பார்த்தது
பரந்தூர் விமான நிலையம்- சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலினை
பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28-ல் பரிசீலிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. இதையடுத்து, தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஜூன் 28-ல் பரிசீலிக்க உள்ளது. பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி