தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் உச்சக்கட்டத்தில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை 44 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டுள்ளது. உண்மையில் கோடை காலத்தில் மட்டும் அல்ல எல்லா காலத்திலும் பீர் போன்ற மதுவகைகள் உடலுக்கு நன்மை செய்யாது. அது சிறுநீரை அதிகரிக்கக்கூடியதாக இருந்தாலும், அதிலும் ஆல்கஹால் இருக்கிறது. அது ஈரல், கல்லீரல் போன்ற உடலுறுப்புகளை பாதிக்கும் தன்மை கொண்டது.