நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு!

77பார்த்தது
நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு!
நடிகை கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், திருமணமான 2 மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். தன்னுடைய கர்ப்ப காலத்தை கணவருடன் கொண்டாடி வந்த அமலா பால், அவ்வபோது போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமலா பாலுக்கு, ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் இருவரும் சற்று முன் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். தங்களின் குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக இலை (ILAI) என பெயர் வைத்துள்ளனர்.