மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களுக்கு நடிகர்
விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள
விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.