நடிகர்
தனுஷ் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் நடந்து வருகிறது. திருப்பதி அலிபிரி பகுதியில் நேற்று மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக எழுந்த புகாரையடுத்து படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதியில் இருக்கும் நடிகர்
தனுஷ் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். அவருடன் சிலர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.