புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.24) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் அருணா, “நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான ADT54, ADT51 நெல் விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.