ஓடிடி-யில் வெளியாகும் ஆடு ஜீவிதம் அன்கட் வெர்சன்

57பார்த்தது
ஓடிடி-யில் வெளியாகும் ஆடு ஜீவிதம் அன்கட் வெர்சன்
'ஆடு ஜீவிதம்' இயக்குநர் ப்ளஸ்ஸி கூறுகையில், “இப்படத்தின் படத்தொகுப்பு முடிந்து பார்க்கும்போது, அதன் நீளம் 3 மணி நேரம் 30 நிமிடங்களாக இருந்தது. பின்னர் இவ்வளவு நேரம் வேண்டாம் என முடிவெடுத்து, 30 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டோம். ஆனால், படம் ஓடிடியில் வெளியாகும்போது பார்வையாளர்கள் அந்த 30 நிமிட காட்சிகளை காணும் வகையில், அவையும் சேர்த்து ஓடிடியில் வெளியிடப்படும்” என்றார். இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் மே மாதத்தில் இந்த படம் ஓடிடி-யில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி