முருகன் மீதான அதீத பக்தியை வெளிப்படுத்தும் வகையில் முருகன், வேல் ஆகியவற்ற தங்கள் உடலில் சிலர் பச்சைக்குத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளம்பெண் ஒருவர் முருகனின் திருவுருவப்படத்தை தனது மார்பில் டாட்டூவாக வரைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர், இதற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண் என்றால் மார்பில் பச்சை குத்தக்கூடாதா என கூறிவருகின்றனர்.