பேருந்தை விரட்டிய காட்டு யானை.. பதறிய பயணிகள்

81பார்த்தது
கேரளாவில் அரசுப் பேருந்து ஒன்று காட்டு வழிப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை நின்றிருந்துள்ளது. அதனைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த யானை பேருந்தை நோக்கி வர தொடங்கியது. இதனால், ஓட்டுநரும் பேருந்தை பின் நோக்கி இயக்கினார். தொடர்ந்து அந்த யானை விரட்டியதால் பேருந்தில் இருந்த பயணிகள் பதறினர். பின்னர், யானை காட்டுக்குள் சென்றதும் பேருந்து இயக்கப்பட்டது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி