2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடி

51பார்த்தது
2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமம் ஒன்றில், பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பபதிகள் தங்கள் 7 மாத குழந்தையுடன் 2 வருடங்களாக பொதுக்கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2018 இல் அரசு கட்டித் தந்த பொதுக் கழிவறை கட்டிடத்தில் குடியேறிய இவர்கள் அப்போது முதல் அங்கு தான் வசிக்கிறார்கள். குளியலறையை படுக்கை அறையாகவும் கழிவறையை பொருட்கள் வைக்கவும் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி