டெல்லி பாஜக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

54பார்த்தது
டெல்லி பண்டிட் பந்த் மார்க்கில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது. விபத்து குறித்த விவரம் முழுமையாக இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி