நீட் தேர்வு முறைகேடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

78பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு: உச்சநீதிமன்றம் உத்தரவு
நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23 மறு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது.

அதன்போது, “தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1563 மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி