கடலூரில் வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

79பார்த்தது
கடலூரில் வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அமைந்துள்ளது மாங்குளம் கிராமம். இன்று (மே 16) பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று வேகமாக இந்த கிராமத்தின் வழியே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். திருக்கடையூர் கோயிலுக்கு சென்று விட்டு சேலம் திரும்பும் வழியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.