ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) தகவலின் படி ஆப்கானிஸ்தான் 6.4 மில்லியன், சிரிய அரபுக் குடியரசு 6.4 மில்லியன், வெனிசுலா 6.1 மில்லியன், உக்ரைன் 6.0 மில்லியன், தெற்குச் சூடான் 2.3 மில்லியன் என்று ஐந்து நாடுகளில் இருந்து சென்ற அகதிகளில் 73% அகதிகள் பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில், வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்த 117.3 மில்லியன் மக்களில், 47 மில்லியன் (40 சதவீதம்) பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கின்றனர்.