கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் உள்ள வீராபூரைச் சேர்ந்தவர் 21 வயதான கிரிஷ் சாவந்த். இவர், காதல் என்ற பெயரில் தனது பக்கத்து வீட்டு பெண் அஞ்சலி அம்பிகேராவை (20) துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று (மே 16) அதிகாலை அஞ்சலி வீட்டிற்குள் புகுந்த கிரிஷ், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்து அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கிரீஷ், அஞ்சலியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.