பணியிட மாறுதல் கலந்தாய்வு - 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்

62பார்த்தது
பணியிட மாறுதல் கலந்தாய்வு - 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அட்டவணையையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி