"ஜிவி பிரகாஷுடன் என் நட்பு தொடரும்" - சைந்தவி அறிக்கை

14352பார்த்தது
"ஜிவி பிரகாஷுடன் என் நட்பு தொடரும்" - சைந்தவி அறிக்கை
ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், சைந்தவி சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “நாங்கள் எங்கள் தனியுரிமையை கோரிய பின்னரும் சில யூடியூப் சேனல்கள் திரித்து செய்திகளை வெளியிடுகின்றனர். எங்களுடைய விவாகரத்து யாருடைய தூண்டுதலின் பேரில் நடைபெறவில்லை. ஒருவருடைய குணத்தைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நானும், ஜி.வி பிரகாசும் 24 வருடங்களாக நண்பர்கள். இந்த நட்பை நாங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வோம். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி