‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’..! உலக அகதிகள் தினம் இன்று

62பார்த்தது
‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’..! உலக அகதிகள் தினம் இன்று
இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் ஏழு கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. “எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது. எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை" என்பது பொதுவான அகதிகள் தினத்தின் முழக்கமாக உள்ளது. சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்தி